தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்
Published on

தென்காசி,

தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கர்நகர் பங்கு தந்தை ஜோசப் ராஜ், அகரக்கட்டு பங்குதந்தை எட்வின் ராஜ், அலவந்தான்குளம் பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன் ஆகியோர் கொடியேற்றினர். நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா வருகிற 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி மாலையில் நற்கருணை பவனி, 28-ந் தேதி சப்பர பவனி நடைபெறுகிறது. இவை இரண்டும் ஆலய வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

29-ந் தேதி நடைபெறும் விழாவில் பாளை. மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொள்கிறார். விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தையர்கள் போஸ்கோ குணசீலன், சதீஷ் செல்வ தயாளன் மற்றும் பங்கு பேரவையினர் செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com