சங்கரன்கோவில் அருகே பயங்கரம்: பெண் சரமாரி வெட்டிக்கொலை கணவர் கைது

சங்கரன்கோவில் அருகே பெண் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில் அருகே பயங்கரம்: பெண் சரமாரி வெட்டிக்கொலை கணவர் கைது
Published on

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே பெண் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

2வது மனைவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பந்தப்புளி வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஆவுடையம்மாள் கணவரை பிரிந்து சென்று அதே ஊரில் ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இதையடுத்து பொன்னுசாமி, சீதாலட்சுமி (57) என்பவரை 2வதாக திருமணம் செய்தார். கணவன்மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.

வெட்டிக்கொலை

நேற்று காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொன்னுசாமி, விறகு வெட்டும் கோடரியால் சீதாலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் சீதாலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீதாலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

குடும்ப தகராறில் மனைவியை கணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com