தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது எம்.எல்.ஏ. பேட்டி

தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது என்று, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெங்கசாமி கூறினார்.
தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது எம்.எல்.ஏ. பேட்டி
Published on

தஞ்சாவூர்,

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை

தமிழக சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட பின்னர் ரெங்கசாமி எம்.எல்.ஏ. தஞ்சை வந்தார். பின்னர் அவர் நேற்று காலை தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால்வள தலைவர் காந்தி, பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரெங்கசாமி எம்.எல்.ஏ.

முன்னதாக எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வந்த ரெங்கசாமி எம்.எல்.ஏ.வை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற னர். பின்னர் ரெங்கசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். அ.தி.மு.க.வை இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக ஜெயலலிதா உருவாக்கினார். அவர் மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற கொள்கையோடு மக்களுக்காக பாடுபட்டார். அவர் கட்டிக்காத்த அ.தி.மு.க.வை சில புல்லுருவிகள், துரோகிகள் அழிக்க திட்டமிட்ட போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அ.தி.மு.க. கட்டுக்கோப்பான கட்சி என்பதை நிருபித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

கட்டுக்கோப்பாக உள்ளது

ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் மக்கள் எண்ணம். அந்த வகையில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடரும். தஞ்சை மாவட்டம் சசிகலா தலைமையை ஏற்று கட்டுக்கோப்போடு அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் தஞ்சை தொகுதியில் ஏராளமான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன. அதே போல தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வகையில் முதல்- அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதே போல் தஞ்சை தொகுதியில் வளர்ச்சி அடைந்த தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

வைத்திலிங்கம் எம்.பி. கூறுகையில், எம்.ஜி.ஆர் தோற்றுவித்த இந்த இயக்கம் 45 ஆண்டுகள் பல சோதனைகளை கடந்து வீறுநடை போட்டு வருகிறது. இப்போதும் இந்த இயக்கத்துக்கு சோதனை வந்தது. இந்த துரோக செயலை தகர்த்து ஜெயலலிதா ஆட்சியை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சி நிரந்தரமாக செயல்படும். இந்த இயக்கம் மேலும், மேலும் வலுப் பெறும்என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.சுப்பிரமணியன், ரத்தினசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சரவணன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலை.ரவி, அ.திமு.க. நிர்வாகிகள் விருத்தாசலம், ராஜமாணிக்கம், பஞ்சாபகேசன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் வேங்கை.கணேசன், மாரியம்மன்கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com