நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

நண்பர்களுடன் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கிய சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
Published on

பூந்தமல்லி,

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 11). இவர், தனது நண்பர்களுடன் ஆலப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றார். நண்பர்கள் அனைவரும் ஏரியில் உல்லாசமாக குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ், திடீரென சேற்றில் கால் சிக்கியதால் நீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், அருகே உள்ள பொதுமக்களை உதவிக்கு அழைத்து வந்தனர். உடனடியாக அவர்கள், ஏரியில் குதித்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா.

பின்னர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் தினேஷ், ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், பலியான தினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com