பரனூர் சுங்கச்சாவடியில் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

பரனூர் சுங்கச்சாவடியில் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரனூர் சுங்கச்சாவடியில் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
Published on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம் (வயது 44). இவர் தனது காரில் நண்பர்கள் 2 பேருடன் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த ராமசுப்பிரமணியம் காரை நிறுத்தினார். அனைவரும் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கினர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கார் நடுரோட்டில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com