தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே தாயை கம்பால் தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
Published on

ஸ்பிக்நகர், ஏப்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்தவர் சோலையம்மாள் (வயது 60). இவரது 2-வது மகன் பேச்சிமுத்து (37) இவர் அவரது மனைவியை கடந்த 2 வருடமாக பிரிந்து, தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பேச்சிமுத்து குடிபோதையில் வீட்டில் உள்ள தண்ணீர் குடத்தை கீழே தட்டி உள்ளார. அதனை பார்த்த அவரது தாயார் சோலையம்மாள் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து அருகில் கிடந்த கம்பால் அவரது தாயாரின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சோலையம்மாளை அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com