செவிலியரை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

செவிலியரை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவிலியரை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திகுமார்(வயது 26). கட்டிட தொழிலாளியான இவருக்கு, 22 வயதுடைய செவிலியருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவருடன் உடலுறவு வைத்துள்ளார். அதன்பின் அவரை திருமணம் செய்ய சக்திகுமார் மறுத்துள்ளார். அந்த செவிலியர் தற்போது 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சக்திகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செவிலியர் புகார் அளித்தார். அதன்பேரில் சக்திகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com