சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு: மேலும் 4 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

காஞ்சீபுரம் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு: மேலும் 4 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே மானாம்பதி கண்டிகையை சேர்ந்த 16 வயது சிறுமியை, வீட்டு வேலைக்கு அழைத்து சென்று போதை மருந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் பெற்றோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கள்ளக்காதலன் அற்புதராஜ் உள்ளிட்ட சிலரை தேடி வந்தனர்.

இந்த வழக்கில், காஞ்சீபுரம் பல்லவர்மேட்டை சேர்ந்த பிரகாஷ் (21), முத்துகல்யாண் (22), வசந்த் (24), மளிகைசெட்டி தெருவை சேர்ந்த மஞ்சுளா (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான பிரகாஷ், முத்துகல்யாண், வசந்த் ஆகியோர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், இவர்கள் மூலமாக ஏனாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு, சிறுமியை விருந்தாக்கி பணம் பறிக்க, வேளாங்கண்ணி திட்டம் தீட்டி இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அற்புதராஜை 3 தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரை பிடித்து விசாரித்தால் தான் சிறுமியை விபசாரத்தில் தள்ளியது யார்?, எத்தனை சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளனர்? என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com