கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு

உவரி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.
கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு
Published on

திசையன்விளை:

உவரி அருகே உள்ள கூட்டப்பனை கீழத்தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 62), மீனவர். இவர் நேற்று அதிகாலை கடலுக்கு படகில் மீன்பிடிக்க செல்வதற்காக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மீன்பிடி படகை மற்ற மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்குள் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகுக்கு அடியில் சிக்கிய அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உவரி கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com