பீர் விலையை அதிகரிக்க அரசு அனுமதி

மராட்டியத்தில் பீர் விலையை அதிகரிக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பீர் விலையை அதிகரிக்க அரசு அனுமதி
Published on

மும்பை,

மராட்டிய மாநில அரசு கடந்த அக்டோபர் மாதம் பீரின் கலால் வரியை உயர்த்தியது. இதையடுத்து பீரின் அதிகபட்ச விலையை அதிகரித்து கொள்ள அனுமதி வழங்குமாறு மாநில அரசிற்கு மதுபான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் அரசு விலையை அதிகரித்து கொள்ள அனுமதி வழங்காமல் இருந்தது.

இதனால் மதுபான நிறுவனங்கள் பீர் வினியோகத்தை குறைத்தன. இதனால் மும்பையில் பல முன்னணி நிறுவனங்களின் பீர்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டது. இந்தநிலையில் பீர் பானத்தின் அதிகப்பட்ச விலையை அதிகரித்து கொள்ள மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் பீர் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புத்தாண்டு சமயத்தில் பீர் விலை உயர்த்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது மதுபான பிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com