செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் 1,215 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 1,215 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் 1,215 பேர் பாதிப்பு
Published on

1,215 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,215 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 943 ஆக உயர்ந்தது. இதில் 8 ஆயிரத்து 87 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 445 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 65 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 522 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 535 ஆக உயர்ந்துள்ளது. 3,008 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com