16 பவுன் நகை மாயம்

விருதுநகரில் 16 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 பவுன் நகை மாயம்
Published on

விருதுநகர்,

மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் வசிப்பவர் ஜெகதீசன். இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது21). இவர் விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தாருடன் வந்த போது தனது 16 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்திருந்தாராம். விருதுநகர் வந்த அவர் அன்றிரவு தனது உறவினர் வீட்டில் தங்கி விட்டு காலையில் நகைப்பையை பார்த்த போது பையில் இருந்த 16 பவுன் நகை மாயமாகியிருந்தது. இதுபற்றி ஐஸ்வர்யா இந்நகர் கிழக்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com