நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவிலில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
Published on

நாகர்கோவில்,

கொட்டாரம் அருகே உள்ள பழைய பொற்றையடி சாலைபுதூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கம்மாள் (வயது 70). இவர், மகன் மணியுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நாகர்கோவில் வந்த மூக்கம்மாள் நேற்று காலை இடலாக்குடி பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சிதறால் நெட்டதட்டுவிளையை சேர்ந்த அனீஷ்(21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மூக்கம்மாள் மீது மோதியது. இதில் மூக்கம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து காட்சிகள் அந்த பகுதியில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூக்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அனீஷ் மீது நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com