திருவாரூர் அருகே, மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

திருவாரூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
திருவாரூர் அருகே, மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

திருவாரூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 19). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தஞ்சை சாலையில் திருவாரூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தண்டலை என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com