வெல்டர் மர்ம சாவு

வெல்டர் மர்மமான முறையில் இறந்தார்.
வெல்டர் மர்ம சாவு
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 35). வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அபிதா, தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். முருகானந்தம் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ளவர்களை திட்டி விட்டு உறங்க சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவில் பார்த்தபோது அவரது கழுத்தை சுற்றி துப்பட்டா இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழாததால் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com