இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

அரியலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
Published on

அரியலூர்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் அலை பரவலை கட்டுப்படுத்தவும், புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இதில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கையும் அமல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

மேலும் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக கூடுதல் கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்தன. இரவு நர ஊரடங்கையொட்டி அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதலே கடைக்காரர்கள் தங்களது கடைகளை மூடத்தொடங்கினர். நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com