குளத்தில் விழுந்தவர் பரிதாப சாவு

கொள்ளிடம் அருகே குளத்தில் விழுந்தவர் பரிதாப இறந்தார்.
குளத்தில் விழுந்தவர் பரிதாப சாவு
Published on

கொள்ளிடம்:

காள்ளிடம் அருகே குளத்தில் விழுந்தவர் பரிதாப இறந்தார்.

குளத்தில் விழுந்தவர் சாவு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி ஊராட்சி பவுசுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விசுவநாதன் மகன் சந்திரமோகன் (வயது 33). இளங்கலை பட்டதாரி. திருமணமாகாத இவர் தினக்கூலி செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர் கடந்த 21-ந் தேதி பவுசுப்பேட்டை மருத்தானி குளத்தில் இறங்கி கை, கால், முகம் கழுவி கொண்டு இருந்துள்ளார். அப்போது தடுமாறி குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அந்த பகுதியினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய சந்திரமோகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்திரமோகனின் சகோதரர் சக்கரவர்த்தி (22) கொடுத்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com