சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

சிக்கமகளூரு:

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமி பலாத்காரம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹாதிஒலே காலனியில் 6 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி சிறுமி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள்.

இந்த சந்தர்ப்பத்தில் அதேபகுதியை சேர்ந்த பிரதீப்(வயது 22) என்பவர், சிறுமியை சாக்லெட் வாங்கி தருவதாக கூறி பாழடைந்த வீட்டிற்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளாள்.

இந்த சத்தம் கேட்டு பெற்றோர், அப்பகுதியினர் ஓடிவந்து பார்த்தனர். அதில் சிறுமியை, பிரதீப் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதற்கிடையே பிரதீப் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பெற்றோர், பனகல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், பிரதீப்பை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை சிக்கமகளூரு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வினிதா தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பலாத்காரம் செய்த பிரதீப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

அந்த அபராத தொகையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கவும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதில் தீர்ப்பில் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com