போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நாங்குநேரி அருகே போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஏர்வாடி சீனிவாசகபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பிரவின் (வயது 50). இவர் சமீபத்தில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இந்த பரிந்துரையை ஏற்று பிரவினை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com