வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கயத்தாறு அருகே வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்குமயிலோடை கிராமத்தைச் சேர்ந்த டேனியல் மகன் செல்லத்துரை. வக்கீல். இவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம், செல்லத் துரையும் அவரது கோழிப்பண்ணையில் பணிபுரியும் சரவணன் என்பவரும் சேர்ந்து கயத்தாரில் கீழ பஜாரில், காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரை மதுபோதையில் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கயத்தார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரை உள்பட 2 பேரையும் கைது செய்தார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

அந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆகியோர் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செல்லத்துரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரிக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று செல்லத்துரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிறை அதிகாரிகளிடம் செல்லத்துரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆவணங்களை போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com