தாராவியில் குடிசை வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது

தாராவியில் குடிசை வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது. இதில் லேசான காயத்துடன் 5 பேர் உயிர் தப்பினர்.
தாராவியில் குடிசை வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது
Published on

மும்பை,

மும்பை தாராவி 60 அடி சாலை இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டின் மேல்தளத்தின் சுவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக மேற்கூரையும் சரிந்தது.

அப்போது, மேல்தளத்தில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் வெளியே வர முடியாமல் உதவிகேட்டு அலறினார்கள்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றினர். இதில், மேல்தளத்தில் இருந்த 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

கடந்த சில நாட்களாக மும்பையில் கொட்டிய கனமழையின் காரணமாக அந்த குடிசை வீட்டின் மேல்தளத்தின் சுவர் உறுதிதன்மை இழந்து இருந்து உள்ளது. இதன் காரணமாகவே அது இடிந்து விழுந்தது தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com