டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து டிரைவர் பலி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஈன்றாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்.
டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து டிரைவர் பலி
Published on

டிராக்டர் டிரைவரான இவர், நேற்று பனப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் மூலம் நிலத்தை ஏர் உழுது கொண்டிருந்தார். அப்போது திடீரென்று டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் டிராக்டருக்கு அடியில் சேற்றில் சிக்கிக்கொண்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com