சுவர் இடிந்து விழுந்து தச்சுத் தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து தச்சுத் தொழிலாளி பலி
சுவர் இடிந்து விழுந்து தச்சுத் தொழிலாளி பலி
Published on

கமுதி,மார்ச்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 32). தச்சுத் தொழிலாளி. கமுதி அருகே உள்ள செய்யாமங்கலத்தில் பழைய ஓட்டு வீடு ஒன்றை இடிக்கும் பணி நடந்து வருகிறது. ராஜபாண்டி சுவர் மீது நின்று ஓடுகளை பிரித்து கொண்டிருந்தார். சுவர் இடிந்து விழுவது போல் இருந்ததால், உடனடியாக கீழே குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக இடிந்த சுவர் அவர் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராஜபாண்டி மயங்கி விட்டார். உடனடியாக அவரை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மலர்விழி அளித்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com