கிணற்றில் தூர் வார இறங்கியபோது கயிறு அறுந்து தொழிலாளி சாவு

கூடுவாஞ்சேரியில் கிணற்றில் தூர் வார இறங்கியபோது கயிறு அறுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கிணற்றில் தூர் வார இறங்கியபோது கயிறு அறுந்து தொழிலாளி சாவு
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் காலனி செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை கூடுவாஞ்சேரி காந்தி நகரில் உள்ள உலகநாதன் என்பவரது வீட்டில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தூர் வாருவதற்காக கயிறு கட்டி இறங்கினார். அப்போது திடீரென கயிறு அறுந்தது.

இதில் செல்வராஜ் கிணற்றில் விழுந்து காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com