செங்குன்றத்தில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த பெண்

செங்குன்றம் ஜெயச்சந்திரன் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 46). இவர், அதே பகுதியில் தனியாக நடந்து சென்றார்.
கவிதா; ராஜா
கவிதா; ராஜா
Published on

அப்போது தலை மற்றும் முகத்தை மறைத்து குல்லா அணிந்து வந்த 2 பேர், தனலட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் தாலி சங்கிலி மற்றும் ரூ.30 ஆயிரத்தை பறித்தனர்.

கொள்ளையர்களுடன் தனலட்சுமி போராடினார். அவரை கீழே தள்ளிவிட்டு நகை, பணத்துடன் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, சம்பவம் நடந்த 3 மணிநேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக செங்குன்றம் தீர்த்தங்கரையாம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா(41), செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்த கவிதா(40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com