சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

16 வயது சிறுமி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த 17&ந் தேதி முதல் வீட்டில் இருந்து திடீரென்று காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார், சிறுமியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் நஞ்சேகவுண்டன்புதூரை சேர்ந்த ஓவிய செல்வன்(19) என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

பேக்சோவில் கைது

இதையடுத்து சிறுமியை திருமணம் செய்ததால் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் நடத்திய அடுத்தக்கட்ட விசாரணையில், ஓவிய செல்வனுக்கும், அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதும், அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதும் தெரியவந்தது.

மேலும் அவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பழனிக்கு கடத்தி சென்றதாகவும், அங்கு வைத்து சிறுமியை திருமணம் செய்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, ஓவிய செல்வனை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com