வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஆவடி,

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் பிரவீன் (வயது 24). இவர் பி.காம்., படித்து முடித்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை இவரது பெற்றோர் பிரவீனை வேலைக்கு எங்கும் போகாமல் இப்படி ஊர் சுற்றி கொண்டிருக்கிறாயே என்று கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பிரவீன் நேற்று காலை வீட்டின் படுக்கை அறைக்கு சென்று உள்தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் கதவை தட்டி உள்ளனர்.

ஆனால் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com