

நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 26). இவர் ஒரு கொலை முயற்சி வழக்கில் கங்கைகொண்டான் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் துரை கங்கைகொண்டான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரையை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.