தெக்கலூர் சோதனைச்சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தெக்கலூர் சோதனைச்சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தெக்கலூர் சோதனைச்சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
Published on

அவினாசி

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கார், லாரி, மற்றும் இருசக்கர வாகனத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து அடுத்த மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட எல்லை தெக்கலூர் அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் அவினாசி போலீஸ் நிலைய சரகம் தெககலூரில் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள் சோதனைச்சாவடியை நேற்று நேரில் தணிக்கை செய்து பணியிலிருந்த போலீசாருக்கு வாகன தணிக்கை மற்றும் அலுவலின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். அப்போது அவினாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com