சென்னை புழல் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருட்டு

சென்னை பெரம்பூர் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
சென்னை புழல் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து திருட்டு
Published on

சென்னை பெரம்பூர் டி.டி.தோட்டத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 24). இவர், புழல் விநாயகபுரம் செம்பியம் சாலை அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த 10 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com