தேனி கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேனி எம்.பி. பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூட்டம்
Published on

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேனி எம்.பி. பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடந்த 2015-16-ம் நிதியாண்டில் 130 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.83 கோடியே 39 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நடந்த 1,577 பணிகள் குறித்தும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின் மூலம் நடத்தப்பட்ட, நடைபெற உள்ள திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தேசிய மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்செல்வன், கதிர்காமு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வடிவேல், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com