அழகுமலையான் கோவில் திருவிழா

அழகுமலையான் கோவில் திருவிழா நடைபெற்றது.
அழகுமலையான் கோவில் திருவிழா
Published on

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே கீழ சின்னனம்பட்டி ஊராட்சியில் உள்ள விஜயமங்கலம் கிராமத்தில், அழகுமலையான், சோகி செட்டி கோவில் உற்சவ விழா நடந்தது. இதில் உலக நன்மைக்காகவும், நாட்டில் உள்ள மக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியும், விசேஷ பூஜைகள், பூ மாலைகளால் சாமி அலங்காரம் செய்தல், கனிகள் மாற்றுதல், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக வைகையில் புனித நீராடி வந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com