தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10-30 மணிக்கு ஆசிரியர் காலனி 1-வது தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இந்த முகாமில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி அடையாதவர்கள், பிளஸ்-2, பட்டப்படிப்பு படித்த ஆண், பெண், மெக்கானிக்கல், டிப்ளமோ, எலக்ட்ரிக்கல், ஐ.டி.ஐ. அனைத்து பிரிவு, டிரைவர் உள்ளிட்ட தகுதிகள் உடையவர்கள் முகாமில் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவுடன் அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com