கோவையில் வெவ்வேறு இடங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை

கோவையில் வெவ்வேறு இடங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கோவையில் வெவ்வேறு இடங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
Published on

கோவை,

கோவை ஆவாரம்பாளையம் ரெயில்வே மேம்பாலம் அருகே ஒருவர் பிணமாக கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இதில் பிணமாக கிடந்தவர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் (வயது 77) என்று தெரியவந்தது. அவருடைய மனைவியும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஜேம்சும் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதேபோல் நியுசித்தாபுதூர் வெங்கிடசாமி ரோட்டை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி காரமடையில் வசித்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்த நாகேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்.எஸ்.புரம் டி.கே.வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (60). காவலாளி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com