குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்

அய்யம்பேட்டை அருகே குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்
Published on

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவில் குடமுருட்டி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பசுபதி கோவில் புள்ளமங்கை கோவில் தெரு அருகே 3 மாட்டு வண்டிகள் மணலுடன் வந்து கொண்டிருந்தன. அவற்றை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

இதில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த பசுபதிகோவில் இந்திரா நகரை சேர்ந்த நந்தகுமார் (வயது55), குச்சிபாளையத் தெருவை சேர்ந்த மணி (28), மேலத்தெருவை சேர்ந்த பழனிசாமி (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com