புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவன் உள்பட 3 பேர் கைது

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.
புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவன் உள்பட 3 பேர் கைது
Published on

விராலிமலை:

விராலிமலை தாலுகா கல்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 26). இவரது மனைவி போதும்பொண்ணு (19). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கோபிநாத்திற்கு வேறு பெண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த போதும்பொண்ணு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்ட கோபிநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் போதும்பொண்ணு இறந்தார். இதனையடுத்து அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் போதும்பொண்ணுவின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போதும்பொண்ணுவின் உறவினர்கள் விராலிமலை போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போதும்பொண்ணுவின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது போதும்பொண்ணுவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று விராலிமலை போலீசார் போதும்பொண்ணுவின் கணவர் கோபிநாத், மாமனார் சுப்பிரமணியன் (50), மாமியார் சரோஜா (48) ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com