திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூரில் அஞ்சனாட்சி அம்மாள் சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கான பிரம்மோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. மணிகண்டீஸ்வரர், அஞ்சனாட்சி அம்மாள் ஆகியோர் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் 1செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com