நெல்லை டவுனில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை டவுனில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை டவுனில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நெல்லை,

நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாலையப்பன். இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் சுகுணா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுகுணாவை நன்றாக படிக்கும்படி பெற்றோர் கண்டித்து உள்ளனர்.

இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தொங்கினார். அவரது சத்தம் கேட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றார். தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுகுணாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற னர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com