திருப்பத்தூர்: கோவிலில் தாலி, உண்டியல் பணம் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் ஆனந்தீஸ்வரர் கோவிலில் இரவில் வழக்கம் போல பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
திருப்பத்தூர்: கோவிலில் தாலி, உண்டியல் பணம் திருட்டு
Published on

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் ஆனந்தீஸ்வரர் கோவிலில் இரவில் வழக்கம் போல பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு கோவிலின் உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் அம்மன் கழுத்தில் இருந்த சுமார் ஒரு பவுன் தாலியையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து ஆம்பூர் பகுதியில் ஆனந்தீஸ்வரர் கோவிலில் தாலி, உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com