திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர், இருளஞ்சேரி, நரசமங்கலம் பகுதிகளில் இருளர் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர், இருளஞ்சேரி, நரசமங்கலம் பகுதிகளில் இருளர் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் 12ந் தேதி ஏற்பட்ட வார்தா புயலால் இந்த பகுதியில் குடிசைகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்று இருளர் மக்கள் கட்சி தலைவர் பிரபு தலைமையில் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாசில்தார் கார்குழலி, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com