கோவில் கும்பாபிஷேகத்தில் 2 மூதாட்டிகளிடம் 8½ பவுன் சங்கிலிகள் பறிப்பு

கோவில் கும்பாபிஷேகத்தில் 2 மூதாட்டிகளிடம் 8½ பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
கோவில் கும்பாபிஷேகத்தில் 2 மூதாட்டிகளிடம் 8½ பவுன் சங்கிலிகள் பறிப்பு
Published on

பாடாலூர்:

தங்கச்சங்கிலிகள் பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாயகி(வயது 70) மற்றும் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா(65) ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அப்போது ரங்கநாயகி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியையும், புஷ்பா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் இது குறித்து தனித்தனியாக பாடாலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com