கொரோனாவுக்கு மகள் பலியானதால் விரக்தி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை முயற்சி

திருவொற்றியூர், கொரோனாவுக்கு மகள் பலியானதால் விரக்தியால் மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கொரோனாவுக்கு மகள் பலியானதால் விரக்தி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை முயற்சி
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 86). இவருடைய 55 வயதான மகள், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவருடைய மகள் இறந்து விட்டார்.

இதனால் மனமுடைந்த கிருஷ்ணன், தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது 2 கை, கால்கள் மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com