புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
Published on

பொன்னமராவதி, மே.20-
பொன்னமராவதி பஸ் நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னமராவதி இந்திராநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 50) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.57 ஆயிரத்து 150 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com