610 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 40 பேர் கைது

610 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 40 பேர் கைது
610 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 40 பேர் கைது
Published on

திருச்சி, டிச.26-
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவாகளிடம் இருந்து மொத்தம் 610 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், அதனை விற்பனை செய்ய பயன்படுத்திய ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com