சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா காலமாக இருந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கும், டீசல் ரூ.93.52-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டர் ரூ 99.20-க்கும், டீசல் லிட்டர் ரூ 93.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com