சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையை பொறுத்தவரை சென்னையில் 31 நாட்களுக்கு பின்னர் இன்று டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ. 94.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com