கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த பலத்த காற்றின் காரணமாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் முள்ளூர் கிராமம் அருகே சாலையோரத்தில் நின்ற காட்டு மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com