ரெயில் மோதி தொழிலாளி பலி

வேடசந்தூர் அருகே ரெயில் மோதி தொழிலாளி ஒருவர் பலியானார்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பசும்பொன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 33). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எரியோடு அருகே உள்ள மறவபட்டியில் கரூர் -திண்டுக்கல் ரெயில் பாதையில் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார், அங்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com