மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
Published on

தா.பேட்டை, மே.15-
தா.பேட்டையை அடுத்த ஊரக்கரை கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா பொடிகள் தயார் செய்வது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். உதவி திட்ட அலுவலர் செல்வகணபதி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆர்.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், முன்னோடி வங்கி அலுவலர் அகல்யா உள்ளிட்ட பலர் மகளிர் குழுக்களுக்கு அரசு வழங்கி வரும் பயிற்சிகள், கடன் உதவிகள் குறித்து சிறப்புரை ஆற்றினர். இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைபடுத்துதல் குறித்து மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com