சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலியானார்.
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி
Published on

வேலூர்,

ஆரணி அருகேயுள்ள சின்னஅய்யம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி லட்சுமி (வயது 59)வேலூரை அடுத்த அன்பூண்டியில் வசிக்கும் உறவினரை பார்க்க பஸ்சில் நேற்று மாலை சென்றார். அங்கு பஸ் நிறுத்தத்தில் இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில், பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com